Advertisment

கரூரில் பள்ளி மாணவி தற்கொலை.. போலீசார் விசாரணை!

 School student incident in Karur .. Police are investigating!

அண்மையில், கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைதுசெய்யப்பட்ட நிலையில் பெற்றோர்கள், உறவினர்கள்மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக அந்தப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், கரூரில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார்பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று (19.11.2021) பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக வெங்கமேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

Advertisment

police incident school student karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe