Advertisment

எட்டாம் வகுப்பு மாணவி கடத்தல்; கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!

school student incident college student pocso act police

சேலம் மாவட்டம், தளவாய்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25). கல்லூரி மாணவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் பூஜா (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஆசை காட்டி வந்துள்ளார்.

Advertisment

வாலிபரின் ஆசை வார்த்தையை நம்பியசிறுமியைசமீபத்தில் அவர்கடத்தியிருக்கிறார். பெற்றோர், பல இடங்களில் தேடியும் சிறுமி இருக்கும் இடம் தெரியவில்லை. மோகன்ராஜூடன் சிறுமி சென்றது குறித்து சிலர் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், மோகன்ராஜ் மீது சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு மோகன்ராஜிடமிருந்து சிறுமியையும் மீட்டனர். சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், கடத்திச் சென்ற குற்றத்திற்காகவும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

police school student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe