school student incident chennai high court and parents

Advertisment

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மறு உடற்கூராய்வை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் தடயவியல் வல்லுநர் ஒருவர் மறு உடற்கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தங்கள் தரப்பு மருத்துவரையும் இக்குழுவில் நியமிக்க வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார், மாணவியின் மறு உடற்கூராய்வுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது. வேண்டுமென்றால், சி.பி.சி.ஐ.டி.க்கும், அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.