Advertisment

மாணவி மர்ம மரணம் - சி.பி.சி.ஐ.டி. விசாரணையை தொடங்கியது! 

school student incident cbcid investigation started

மாணவி மர்ம மரணம் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர்கடந்த ஜூலை 12- ஆம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று (17/07/2022) பெரும் கலவரம் மூண்டது. பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டது. ஏராளமான காவல்துறையினர் காயமடைந்தனர். சின்னசேலம் காவல் நிலையத்தில் 10- க்கும் மேற்பட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 329 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

மேலும். பள்ளியின் தாளாளர், செயலாளர், ஆசிரியர்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

incident student school
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe