school student cleaning toilet in thiruvallur at viral video

திருவள்ளூரில் 11ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பகுதி வங்கனூர். இந்த பள்ளியில், அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியில் எராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், திருக்குறளுக்கு சரியான விளக்கம் கொடுக்காததால், அந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்ய தண்டனை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.