
சென்னை அருகே கும்மிடிப்பூண்டி இல் புறநகர் ரயிலில் பள்ளி மாணவி ஒருவர் சாகசம் காட்டுவதைப் போல் ஓடிய ரயில் ஏறும் வீடியோ காட்சிகள் காண்போரை பதற வைக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் பள்ளி சீருடையில் ஓடி வந்த அந்த மாணவி வேகமாக நகரும் ரயிலில் ஏறியதோடு காலை நடை மேடையில் வைத்து உரசியபடி செல்கிறார். கல்லூரி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இதுபோன்று ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது வெளியாகி கண்டனத்தைப் பெற்று வரும் நிலையில், பள்ளி சீருடையுடன் மாணவி ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டது பார்ப்போரைப் பதற வைப்பதோடு கண்டனத்தையும் பெற்று வருகிறது. இதுபோன்ற செயல்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடாதவாறு ரயில்வே நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.