Skip to main content

விஜய்சேதுபதி நடித்த '96' படம் பாணியில் சென்னையில் நெகிழ்ச்சியான உண்மை சம்பவம்...!

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

 

9

 


சமீபத்தில் வெளியாகி அனைவரின் மனதிலும் அவர்களது பள்ளிக்கூட நினைவுகளை திரும்ப பார்க்கச் செய்தது  96 படம். சென்னையில் அந்தப் படப்பாணியில், 95 என்ற தலைப்பில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு  நடந்தது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள ஆறுமுக நாடார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 1995-ல் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவிகள்,  23 ஆண்டுகளுக்கு பின் அனைவரும் 96 படப்பாணியில் சந்திக்க திட்டமிட்டனர். அந்த ஆண்டு பயின்ற 50 மாணவிகளில் 36 மாணவிகள் பல ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து ஒருவருக்கு ஒருவர் தங்கள் அன்பை பகிர்ந்துகொண்டனர்.

 


மஞ்சுளா மற்றும் வைஜெயந்தி ஆகியோர் ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். முதலில் மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அங்கு அனைவரும் ஒன்றுதிரண்டனர். பல வருடங்களுக்குப் பின்பு சந்திப்பதால் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தங்கள் அன்பை பகிர்ந்துகொண்டனர். அதிலும் ஒரு சிலர் ஒருவருக்கு இருவர் முத்தத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் ஆனந்த கண்ணீர் சிந்தி அவர்களின் அன்பை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வை கண்டு, கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் சிலர் நெகிழ்ச்சி அடைந்தனர். 

 

i

 

 

அனைவரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டனர். சிறு பிள்ளைகள்போல கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடி மகிழ்ந்தனர். பிறகு அனைவரும் மத்திய உணவிற்கு சென்று, விரும்பியதை சாப்பிட்டு கண்ணீருடன் பிரியாவிடை பெற்றனர். இந்தசம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.   
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஷங்கருக்காக ஒன்றுகூடிய இயக்குநர்கள்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

Directors assembled for Shankar

 

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி, அந்நியன் உட்பட அனைத்து படங்களிலுமே சமூகக் கருத்து சார்ந்த கதைகள் ஏதாவது ஒன்று அந்த படத்தில் இருக்கும். அந்த வகையில், இவர் இயக்கி கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடியும் தருவாயில் உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்தியன் படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் ஜேஞ்சர் படத்தையும் இவர் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் பான் இந்தியன் படமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

 

இவர் கடந்த 1993 ஆம் ஆண்டில் ஜென்டில்மேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரிசர்வேஷன் பற்றி இயக்கியிருந்த அந்த படத்தில் அர்ஜூன், நம்பியார், கவுண்டமணி, செந்தில், மதுபாலா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இவர், பிரபல இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவி இயக்குநராக இருந்த பின் 1993 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கினார். இதனிடையே 2023 ஆம் ஆண்டுடன் தனது 30 ஆண்டு திரைப் பயணத்தை நிறைவு செய்கிறார். இதன் காரணமாக தமிழ் திரைப்பிரபலங்கள் உட்பட அனைத்து கலைஞர்களும் இயக்குநர் ஷங்கருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இதைச்  சிறப்பிக்கும் விதமாக ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும்  திரையுலக நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்து கொண்டாடியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த கொண்டாட்டத்தில், பிரபல இயக்குநர்களான ஏ.ஆர். முருகதாஸ், சசி, கார்த்திக் சுப்புராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,  ‘பொன்மாலை பொழுது ... அழகான மாலை’ என்று பதிவிட்டிருந்தார்.

 

 

Next Story

‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ - 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவர்கள்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nagapattinam vedaranyam boys government school students reunion

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1985 - 1987 ஆம் ஆண்டுகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் மீண்டும் ஒருவர் ஒருவரை சந்தித்துக் கொள்ள முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன்படி 36 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் தங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

 

இவர்களுக்கு தற்போது 60 வயது ஆகிறது. மேலும் இவர்களில் பலர் ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் மற்றும் காவல்துறை எனப் பல்வேறு பதவிகளில் பணியாற்றி தற்போது  ஓய்வு பெற்றிருக்கின்றனர். இன்னும் சிலர் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இந்த சந்திப்பின்போது தங்களுக்கு கற்பித்த 8 ஆசிரியர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தனர்.

 

இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களும் பாடம் நடத்தினர்.  அப்போது ஆசிரியர் கையில் குச்சியைக் கொடுத்து நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அடித்ததைப் போலவே மீண்டும் எங்களை அடிங்க சார் என கையை நீட்டி ஒவ்வொருவராக ஆசிரியரிடம் அடி வாங்கி மகிழ்ந்தனர். அதன் பின்னர் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் தங்களது பள்ளிக் கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்களின் மகன்கள், மகள்கள், பேரன் மற்றும் பேத்திகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்  இறுதியில் தங்களது ஆசிரியர்களை காரில் அழைத்துச் சென்று அவர்களது வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி பிரியா விடை கொடுத்துச் சென்றனர். முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களைப் பள்ளிக்கு அழைத்து சந்தித்து மரியாதை செய்த இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.