Published on 26/05/2025 | Edited on 26/05/2025

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் மூன்று இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தனியார் பள்ளிகளுக்கு இயக்குநர் பழனிசாமி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாடநூல் கழக செயலாளர் குப்புசாமி தனியார் பள்ளிகள் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணி பாடநூல் கழகச் செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.