Skip to main content

பள்ளியா...? குளமா...?- அவல நிலையில் இனாம் மாத்தூர் அரசுப்பள்ளி!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

School ...? pool ...? - Inam Mathur Government School in dire straits!

 

நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (17.12.2021) மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் இதுபோல் சிதிலமடைந்திருக்கும் பள்ளி கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள 325 பள்ளி கட்டடங்களில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளி கட்டடங்களை இடிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். அதேபோல், மதுரையில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் 120 வகுப்பறை கட்டடங்கள், 80 கழிப்பறை கட்டடங்கள் என மொத்தம் 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

 

School ...? pool ...? - Inam Mathur Government School in dire straits!

 

இது ஒருபக்கம் இருக்க திருச்சி இனாம் மாத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று தண்ணீரில் மிதக்கும் அளவிற்குக் குளமாக காட்சியளிக்கிறது. பள்ளி கட்டடங்கள் குறித்து சோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு பள்ளியே ஆபத்தான நிலையில் நீர்நிலையாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒருமாத காலமாக இப்படி நீர் தேங்கியிருப்பதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வகுப்புகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. மேலும், அந்தப் பள்ளியே குளம் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. 2006 - 2008 ஆண்டுகளில் இந்தப் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு 2012ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. பள்ளி வளாகத்தில் இப்படி குளம்போல நீர் தேங்குவதால் வகுப்புகள் எடுக்கச் சிரமமாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

“அந்தப் பள்ளியில் எந்த வகுப்பும் நடத்தக் கூடாது என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளோம். இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும். மோட்டர் வைத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொஞ்சம் நில ஆக்கிரமிப்பும் இருந்தது. இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும்” என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உறுதியளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.