Advertisment

பள்ளிகள் திறப்பு - சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்..!

school opens after lockdown

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் இன்று (19.01.2021) திறக்கப்பட்டது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளில் இன்று மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள், ரோஜா பூ உள்ளிட்டவைகளை வழங்கி, பன்னீர் தெளித்து வரவேற்பு வழங்கினார்கள்.

Advertisment

கரோனா பாதிப்பால்மூடிக் கிடந்த வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டுப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம்அணிந்து, பள்ளி வளாகத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்து பின்னர்சேனிடைசர் மூலம் கைகளைக் கழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

school opens after lockdown

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றோர்களின் அனுமதி கடிதத்தோடே வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கபட்டனர்.

open schools
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe