Advertisment

பள்ளி திறப்பு எதிரொலி; ஆம்னி பேருந்து கட்டணம் பகீர் உயர்வு

NN

Advertisment

கொடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நாளை (02/062025) திறக்கப்பட இருப்பதால் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல 2,500 ரூபாய் வரை டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு வர 2,899 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு வர 2200 ரூபாயும், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல 2,500 ரூபாயும், என கட்டணங்கள் அதிகமாகியுள்ளது. அதே நேரம் பள்ளிகள் திறப்பை ஒட்டி தமிழக போக்குவரத்து துறை சார்பில் சுமார் 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

summer session omni bus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe