School lunch students faint in Tiruvannamalai

Advertisment

திருவண்ணாமலை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் அருகே தண்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியில் வழங்கும் மதிய உணவினைச் சாப்பிட்டுள்ளனர். மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததாகத்தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்களைத்திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவர்களுக்குச்சிகிச்சை அளித்து தற்போது அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.