தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நேற்று இரவில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்டத்தில்உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்திருக்கிறார்.

Advertisment

 School holidays in Thoothukudi due to heavy rains

இன்று காலையில் இருந்து கிட்டத்தட்ட நான்கு முப்பது மணியிலிருந்து கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தூத்துக்குடி புறநகர் கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம், விமான நிலைய பகுதி ஆகிய பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன மழை தொடர்ந்தால் விடுமுறை நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.