Advertisment

பள்ளி மாணவிகளை மயக்கி பாலியல் வன்புணர்வு..! வாலிபர் கைது!

School girls case youth arrested by kanyakumari police

Advertisment

பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளைக் குறிவைத்து பாலியல் வன்புணர்வு செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர் அபி. இவனுக்கு வயது 20. இவன் அப்பகுதியில் ரோமியோ போல் வலம்வந்துகொண்டிருந்தான். கரோனா காலத்தில் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பள்ளி மாணவிகளிடம் நைசாகப் பழகி, அவர்களின் அழகையும் ஆடையையும் வர்ணித்துப் பேசி அந்த மாணவிகளின் மனதில் இடம்பிடித்துவிடுவான்.

பின்னர் அந்த மாணவிகளின் செல் நம்பரை வாங்கிக் கொண்டு வாட்ஸ் ஆப் மூலம் இரவு பகலாக அவர்களை நடிகைகளுக்கு நிகராக வர்ணித்து, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்வதாக ஆசையை ஏற்படுத்தி, அந்த மாணவிகளை மயக்கி, பிறகு தன்வசப்படுத்திவிடுகிறான். பின்னர் அந்த மாணவிகளைத் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, அதன்பிறகு அந்த மாணவிகளிடம் சண்டையிட்டுப் பிரிந்துவிடுகிறான்.

Advertisment

இந்த நிலையில்தான், இதேபோல் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி மயக்கி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அந்த மாணவியிடம் சண்டையிட்டுப் பிரிந்துள்ளான். ஆனால், அந்த மாணவி அவனை விட்டுவிடாமல் அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்திருக்கிறார். அப்போது அவன் 10ஆம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவியிடம் தொடர்பில் இருப்பதை அந்த மாணவி கண்டுபிடித்திருக்கிறார்.

இதையடுத்து அந்த பிளஸ் 2 மாணவி, நடந்த விஷயத்தைப் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். உடனே அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், அபியின் வீட்டிற்குச் சென்றபோது அங்கு அவன் 10ஆம் வகுப்பு மாணவியுடன் இருப்பதைப் பார்த்தனர். உடனே அந்த மாணவியைமீட்டதுடன், அவனையும் கைது செய்தனர்.

மேலும் போலீசார் விசாரணையில், அவன் இதேபோல் பல மாணவிகளிடம் இருந்த தொடர்பை ஒத்துக்கொண்டுள்ளான். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe