Advertisment

தீவிர காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி?

School girl passed away severe fever?

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி கிராமத்தின் ஆதிநாராயணன் மகள் தங்கவேணி (12). ஆதிநாராயணன் டெய்லர் தொழிலில் இருப்பவர். தங்கவேணி அங்குள்ள அரசு மேனிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருபவர். இதனிடையே கடந்த சில நாட்களாக மாணவி தங்கவேணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

அண்மைக் காலமாக மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி சுற்று வட்டாரங்களில் சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் தீவரமாகப் பரவி வருகிறது என்கிறார்கள். காய்ச்சலுக்கு மாணவி பலியானதையடுத்து அந்த வட்டாரங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisment

அந்த மாணவிக்கு காய்ச்சல் கண்டவுடன் மருத்துவமனைக்கு கொண்டு வராமல் மூன்று நாட்கள் கழித்தே கொண்டு வந்துள்ளனர். மேலும் அவருக்கு நீர் சத்து குறைபாடும் இருந்திருக்கிறது. அவசர சிகிச்சைக்குப் பின்பு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார் என்கிறார்கள் சுகாதாரத்துறையினர். மாணவியின் மரணம் கிராமப்புறத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

nellai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe