Advertisment

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை!-தட்டிக்கேட்ட தந்தை கத்தியால் குத்திக் கொலை

 School girl love trouble! Father stabbed to death after knocking

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவியை காதல் செய்ய வலியுறுத்திய நிலையில் தட்டிக்கேட்ட தந்தையை வாலிபர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி காவல் சரகம் வீரணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொப்பன் (எ) சின்னராசு (48). இவரது மகள் குழிப்பிறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இதே ஊரைச் சேரந்த சண்முகம் (எ) முருகன் (21) தன்னை காதலிக்க வேண்டும் என மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். சண்முகம் (எ) முருகன் தன் மகளுக்கு தொல்லை கொடுப்பதை அறிந்த மாணவியின் தந்தை சின்னராசு ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையோரம் நின்ற முருகனிடம் சென்று என் மகளுக்கு தொந்தரவு கொடுக்காதே. படிக்க வேண்டும் என்று சத்தம் போட்டுள்ளார். அதனையடுத்து வீட்டிற்குச் சென்ற முருகன்தன் வீட்டில் இருந்த ஒரு கத்தியுடன் வந்து தன்னை கண்டித்த சின்னராசு வயிற்றில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சின்னராசு ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கண்டிக்க வந்த மாணவியின் தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

love police Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe