Skip to main content

காதலிக்க மறுப்பு - பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி மரணம்!

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
sko


மதுரை அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ரா தேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த மணிப்பாண்டி, பேச்சியம்மாள் என்ற தம்பதியின் மகள் சித்திராதேவி. 14 வயது நிரம்பிய இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் (23), ஒருதலையாக காதலித்துள்ளார். இவர் மாணவியிடம் காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்வோம் என்றும் பள்ளிக்கு சென்று வரும்போது அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.

இதனை பெற்றோரிடம் சித்திராதேவி தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் தந்தை மணிபாண்டி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனால் பாலமுருகன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று இறுதியாக கேட்டுள்ளார். அப்போதும் மாணவி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்து மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.

இதைக்கண்டு அக்கபக்கத்தில் இருந்தவர்கள் தீயை அனைத்துள்ளனர். பின்னர் மாணவியை திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய பள்ளி மாணவி!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
schoolgirl who worked as a conductor in a government bus

கர்நாடக மாநிலம் அப்சல்பூர் கட்டஹாரா கிராமத்தைச் சேர்ந்த வித்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி வித்யாவிற்கு பேருந்து நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா தன்னுடைய நடத்துநர் ஆசை குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்யாவின் ஆசையைக் கேட்ட அதிகாரிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளனர். முதலில் மாணவி வித்யாவிற்கு எவ்வாறு பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணி செய்ய அனுமதி அளித்தனர். 

பின்னர், அதன்படி அப்சல்பூரில் இருந்து கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் மாணவி வித்யா நடத்துநராகப் பணி செய்தார். அவருடன் நடத்துநரும் இருக்கையில், பயணிகளிடம் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு, உரிய பயணச்சீட்டை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாணவிக்கும், அவரின் ஆசையை நிறைவேற்றிய போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை; போக்சோவில் நடவடிக்கை எடுத்த போலீஸ்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 The aunt who took the vacationing girl astray; Police take action in POCSO

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.