புதுச்சேரியை அடுத்த கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (25). இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு 15 வயது, பள்ளி மாணவியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார்.

Advertisment

Arrested

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து பரமசிவத்தை கைது செய்து, அவர் மீது புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் போக்ஸோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி தனபால் சிறுமியை கர்ப்பமாக்கிய பரமசிவத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.