Advertisment

பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு; சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்

school education department erode government school students ooty tour

Advertisment

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவமாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவமாணவிகளுக்கு சிறார் திரைப்பட போட்டி, குழு போட்டிகள், தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகள்கோடை கொண்டாட்டம் என்ற தலைப்பில் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை கண்டுகளிக்க அரசு செலவில் 5 நாட்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் ஈரோடு மாவட்டத்தில் 27 அரசு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 12 மாணவிகள், 7 மாணவர்கள் என 19 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவமாணவிகள் என மொத்தம் 27 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கோடை கொண்டாட்டத்திற்காக நேற்று சிறப்பு அரசு பஸ்சில் ஈரோட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இன்று முதல் 27 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ஊட்டியில் தங்க வைக்கப்பட்டுகாலை, மதியம் வகுப்புகள், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. 27 மாணவ மாணவிகளை கண்காணிக்க மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கீதா தலைமையில் மூன்றுஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe