Advertisment

சிறுவர்களைத் தாக்கிய பள்ளி தாளாளர்; புகார் மனு அளித்துள்ள பெற்றோர்கள்

The school correspondent  who attacked the boys; Parents who have filed a complaint

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை அடுத்த கோட்டை பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆங்கில வழி கல்விபள்ளி தாளாளர் சங்கீதா வழக்கமாகப் பள்ளிக்கு அருகாமையில் இருக்கக்கூடிய காலியான வயல் வெளிப் பகுதியில் காரை நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில் அவர் நேற்று வழக்கம் போல் காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அவர் மாலை வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதனிடையே அவர் வந்து பார்த்தசமயத்தில் வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் நான்கு பேரை அழைத்து நீங்கள்தான் கண்ணாடியை உடைத்தீர்கள் என்று கூறி அவர்கள் 4 பேரையும் காரில் ஏற்றிச் சென்று சரமாரியாகத்தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் அறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். துறையூர் காவல்நிலையத்தில் பள்ளி தாளாளர் சங்கீதா மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe