Advertisment

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... தேர்வுகள் ஒத்திவைப்பு!!!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கஜா புயலின் பாதிப்பிலுருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீளவில்லை. பல்வேறு இடங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. இதனால் நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. திருவாரூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு, கொடைக்கானல் வட்டம் ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கஜா புயல் பாதிப்பு காரணமாக இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது தொழில்நுட்பக்கல்வி இயக்ககம். இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளிலும் இன்று நடபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி நடபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

cyclone gaja leave Storm Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe