திருச்சியில் பரபரப்பான சாலையில் தனியார் பள்ளி பேருந்தும், கல்லூரி பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்புறமாக வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் பள்ளி வேனில் இருந்த மூன்று மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கடை ஒன்றிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் அவை சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.