புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மறமடக்கி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பொது தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் சாதிக்கும் பள்ளியாக உள்ள இந்த பள்ளியில் மாணவர்கள் படிக்க வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அதனால் பல முறை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது 10 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட ஒரே கட்டிடமாக கட்டுவதற்காக நபார்டு நிதி சுமார் ரூ. 2 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

 school classroom roof is 200 feet away; women who have been reconstructed !!

ஆனால் அந்த புதிய கட்டிடம் கட்ட பள்ளி வளாகத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 60 அடி நீளமுள்ள நல்ல நிலையில் உள்ள பழைய ஓட்டு கட்டிடம் இருந்தது. அந்த ஓட்டு கட்டிடத்தை அகற்றினால் தான் புதிய கட்டிடம் கட்ட முடியும் என்ற நிலையில் ஓட்டுக்கட்டிடத்தை இடித்தால் மாணவர்களுக்கு வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால் அந்த கிராம மக்கள் பழைய ஓட்டுக் கட்டிடத்தை உடைத்த மாற்று இடத்தில் அமைக்க பெரிய அளவு செலவாகும் என்பதால் கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்ட ஓடுகளை மட்டும் அகற்றிவிட்டு எழும்புக்கூடாக இருந்த மரச்சட்டங்களால் ஆன மேற்கூரையை அப்பகுதியில் 100 நாள் வேலை செய்த பெண்களின் உதவியுடன் தூக்கி 200 அடி தூரத்தில் மீண்டும் அதே 60 அடி நீளத்தில் ஓட்டு வகுப்பறை கட்டிடத்தை அமைத்தனர். ஒரே நாளில் ஒரு கட்டிடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது.. வகுப்பறைகள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் வகுப்பறை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டும் காலத்தில் மாணவர்கள் படிக்க வகுப்பறை இல்லாமல் போகும் என்பதால் பழைய ஓட்டு கட்டிடத்தை உடைக்காமல் அப்படியே தூக்கி மாற்று இடத்தில் அமைத்துவிட்டோம். 2 அல்லது 3 வகுப்பறைகள் நடத்தலாம். புதிய கட்டிடம் கட்டி திறக்கப்படும் வரை இந்த தற்காலிக ஓட்டு கட்டிடத்தில் வகுப்புகள் செயல்படும் என்றனர்.