Advertisment

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 6ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (27.07.2021) அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், ஷில்லாங்கில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே இறந்தார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 6ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, ராமேஸ்வரம் அருகே பேய்கரும்பிலுள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, காவல்துறை டிஐஜி மயில்வாகனன் மற்றும் பலர் மலரஞ்சலி செலுத்தினர். அதேபோல் சென்னை சூளை பகுதியில் உள்ள பொதுநல மன்றம் சார்பில் பொது மக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.