Advertisment

பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து; 30 குழந்தைகள் காயம்

School bus overturned iccident 30 children injured

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே மூங்கில்பாடி அருகே தனியார் பள்ளி ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான பள்ளி பேருந்து பள்ளிக் குழந்தைகளுடன் மூங்கில்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பள்ளி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனால் பள்ளி பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயங்களுடன் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் சின்ன சேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் நேரில் சென்றுவிசாரணை செய்து வருகிறார். மேலும் சின்ன சேலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 குழந்தைகள் காயமடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
kallakurichi students bus school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe