School bus loses control! Students in intensive care!

திருவாரூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் மூன்று குழந்தைகளும் ஒட்டுநரும் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Advertisment

திருவாரூர் கே.டி.ஆர். எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் வாகனம் மாணவர்களோடு அடியக்கமங்கலம் பகுதிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாககட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதில் படுகாயமடைந்த ஒன்பது வயது சிறுமிகள் இருவர் மற்றும் ஓட்டுநர் முருகானந்தம் (57) உள்ளிட்ட 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.