School bus fire accident

சிதம்பரம் புறவழி சாலையில் ஒரு குளோபல் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளைத் தினம் தோறும் பள்ளியின் வாகனங்களில் அழைத்து வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பரங்கிப்பேட்டை, முட்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிதம்பரத்தில் இருக்கும் பள்ளிக்கு வேன் வந்துகொண்டிருந்தது. வேனில் 20 குழந்தைகள் இருந்துள்ளனர்.

Advertisment

இந்த வேன் பி முட்லூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென வேனில் தீப்பொறி கிளம்பி தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளை அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் பள்ளி வேனில் தீ மளமளவெனபரவி வேன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.