கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் விஷ்ணு. வயது 7. ஆவட்டி அருகே உள்ள சத்திய சாய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மாணவனை கண்டுகொள்ளாமல் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் சிறிது தூரம் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த பொதுமக்கள் மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளான்.

Advertisment

இந்த நிலையில் இன்று காலை புலிவலம் கிராமம் வழியாக வந்த பள்ளி பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் அலட்சியமாக செயல்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மூன்று மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.