School boys hung out for bus; for Instagram post

Advertisment

பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. அண்மையில் குன்றத்தூரில் பள்ளி மாணவர் ஒருவர் பேருந்தில் தொங்கியபடி பயணித்தபோது தவறி கீழே விழுந்து இரண்டு கால்களை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பேருந்துகள் அதிகம் இல்லாததால் பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்வதாக கூறப்பட்டாலும், சில இடங்களில் மாணவர்கள் வேண்டுமென்றே தொங்கிக்கொண்டு செல்வதாக புகார்கள் எழுவது வழக்கம். இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடவேண்டும் என்பதற்காகவே பள்ளி மாணவர்கள் பேருந்தில் பின்புறம் ஆபத்தாக தொங்கிக்கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் ஒரு தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்கள் தொங்கிக்கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் பேருந்து பின்புறமும் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.