School boy passed away

Advertisment

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனியைச் சேர்ந்தவர் சாந்தகுமார்(39). இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரின் 14 வயது மகன் தேவராஜ் விளையாட சென்று விட்டு, தாமதமாக வீடு திரும்பி உள்ளார். இதனை கண்டித்து அவரின் தந்தை சாந்தகுமார் சத்தம் போட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த சிறுவன் தேவராஜ் மனமுடைந்து வீட்டிற்குள் சென்று தனது தாயின் புடவையை எடுத்து பேனில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகனின் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை சாந்தகுமார், இது குறித்து பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்துள்ள பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.