Advertisment

படியில் பயணித்த பள்ளி மாணவர்; பேருந்திலிருந்து தவறி விழுந்து மரணம்

School boy passed away who travel in government bus in madurai

Advertisment

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் பிரபாகரன். இவர் ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர், தினமும் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு அரசுப் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு சென்றுவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை விளாங்குடியிலிருந்து ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தனது பள்ளிக்கு செல்ல அரசுப் பேருந்தில் பயணித்துள்ளார். காலை நேரம் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் அதிகம் பயணித்ததின் காரணமாக பேருந்தில் அதிகளவு கூட்டம் இருந்தது. இதன் காரணமாக அவர் பேருந்தின் முன்பக்க ஏறும் வழியில் இருக்கும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பிரபாகரன்பேருந்திலிருந்து தவறி சாலையில் விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe