Advertisment

செங்கோல் விவகாரம்: தொடரும் எதிர்ப்புகள் - அறிக்கை வெளியிட்ட திருவாவடுதுறை ஆதீனம்

The Scepter Affair; Ongoing protests; Thiruvaduthurai Atheenam issued the report

Advertisment

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடந்தது. பிரதமர் மோடி இப்புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதன் பின் செங்கோல் ஒன்றை கையில் ஏந்தி சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவினார். இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில் திருவாவடுதுறை ஆதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஜூன் 9ஆம் தேதி இந்து நாளிதழில்மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது பற்றித் தெளிவான தகவல் இல்லை என்று திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் கூறியதாகச் செய்தி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வறிக்கைவரலாற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதாகும்.உண்மைகளைத் திரித்து விஷமத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. காலை பூசைக்குப் பின்னர்எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றிஇந்து நிருபர் ஆதீனகர்த்தரைச் சந்தித்தார்.ஆதினகர்த்தரின் மொழிகள் வரலாற்றுக்குப் புறம்பாகத் திரிக்கப்பட்டுள்ளன.

‘1947ஆம் ஆண்டு நிகழ்வுற்ற செங்கோல் வைபவத்தில்திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு குறித்துப் பெருமையடைகிறோம். திருவாவடுதுறையிலிருந்து ஒரு குழுஅழைப்பின் பேரில்செங்கோலை எடுத்துக் கொண்டு தில்லி சென்றது. அங்குசெங்கோலானது மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டது.பின்னர் திரும்பப் பெறப்பட்டுகங்கை நீரால் மந்திரம் ஏற்றப்பட்டது. இதன் பின்னர்பண்டித நேரு அவர்களிடம் வழங்கப்பட்டது’என்று இச்சம்பவம் குறித்துஆதீனகர்த்தர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

Advertisment

தம்முடைய விளக்கத்தை மேலும் தெளிவுபடுத்துகையில், 'மவுண்ட்பேட்டனுக்குசெங்கோல் வழங்கப்பெற்றதா என்னும் கேள்விக்கு, செங்கோலானது நேருவுக்கு வழங்கப்பட்டது என்னும் விடை அளிக்கப்பட்டது. ஏனெனில், இதுவே முழுமையான தகவல். செங்கோலானது நிறைவாக,பண்டித நேருவின் கரங்களை அடைந்தது. இதுதான் கூறப்பெற்றது' என்றும் ஆதீனகர்த்தர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சமீபத்தில் பதிப்பிக்கப்பெற்ற திருவாவடுதுறை ஆதீன வரலாற்றில்செங்கோல் சிறப்பு என்னும் அத்தியாயத்தில்செங்கோலானது மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டுபின்னர் கங்கை நீர் அபிஷேகத்திற்காக எடுத்துப் போகப்பட்டது என்பது மிக விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்டுள்ள பதிவுகளையே ஆதீனம் இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறது.

இந்நிகழ்வு தொடர்பாக1947 ஆகஸ்டில்அப்போதைய ஆதீனகர்த்தர்20ஆவது மகாசன்னிதானத்தின் அணுக்கத் தொண்டராக (தனிச் செயலர் போல்) இருந்தவரும்இப்போது 96 வயதைத் தொட்டிருப்பவருமானதிரு. மாசிலாமணிப் பிள்ளைநிகழ்ந்த சம்பவங்களை மிகக் கோர்வையாகவும் தெளிவாகவும் தெரிவித்துள்ளார்கள். அப்போதைய காலகட்டத்தின், அதாவது 1947ஆம் ஆண்டின்நேரடி சாட்சி, காட்சிப் பிரமாணம் மாசிலாமணிப் பிள்ளை. மவுண்ட்பேட்டனிடம் செங்கோலைக் கொடுத்து வாங்க வேண்டும் என்னும் தங்களின் பணியை ஆதீனக் குழுவினர் செவ்வனே செய்தார்கள் என்பதை மாசிலாமணிப் பிள்ளை நினைவுகூர்கிறார்.பின்னர் பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கியதையும் தெளிவுற உரைக்கிறார். ராஜகோபாலாசார்யார் முனைப்பில் இது செய்யப்பட்டது என்பதையும் நினைவு கூர்கிற மாசிலாமணிப் பிள்ளை, 1947 ஆகஸ்டில் மதராஸ் கலெக்டர் ஆதீனத்திற்கு வருகை புரிந்ததையும் செங்கோல் ஏற்பாடுகளில் பங்கேற்றதையும் தெரிவிக்கிறார். இந்து நாளிதழ் செய்தி அறிக்கைக்கு முன்பாகவேஇவற்றையெல்லாம் மாசிலாமணி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களின் ஒரு சாரார்ஆதீனத்திற்குக் குறையேற்படும்படியான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுதிருவாவடுதுறை ஆதீனகர்த்தரை மிகவும் புண்படுத்துகிறது. மவுண்ட்பேட்டன் செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லாமைக்குக் காரணம்ஆதீனக் குழுவினர் புகைப்படக் கருவிகளோடு செல்லவில்லை. செங்கோலை வழங்க வேண்டிய இடத்தில் முறையாக வழங்கிமங்கல நாதமும் திருமுறைத் தமிழும் ஒலிக்க அளித்துதங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை முறையாக இக்குழுவினர் செய்து நிறைவேற்றினார்கள்.திரும்ப வந்து ஆதீனகர்த்தரிடம் செய்தியைத் தெரிவித்தார்கள். இவையெல்லாம்தொடர்ந்து வந்த காலங்களில் பல இடங்களில்ஊடகங்கள் உட்படபதிவு செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

sengol
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe