Advertisment

“இன்று காணும் இந்த காட்சி நூற்றாண்டு கால போராட்டத்தின் விளைவு” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். 21 துறைகளைச் சேர்ந்த 3,259 மாணவிகளுக்குப்பட்டங்கள் வழங்கப்பட்டது.

Advertisment

விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ''தற்போது பட்டம் பெரும் மாணவிகளின் பெரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத்தருகிறது. முதல் தலைமுறை பட்டதாரிகள் அடுத்து வரும் தலைமுறைகளைப் படிக்க வைக்க வேண்டும். பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது பெருமை அல்ல அடிப்படை உரிமை. இன்னார் படிக்கலாம் இன்னார் படிக்கத் தேவையில்லை, உடல் உழைப்பு வேலைகளை மட்டுமே பார்க்கலாம் என்று நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. பெண்களின் நிலை இதை விட மோசமாக இருந்தது. நீதிக் கட்சி ஆட்சி வந்து இந்த நிலைமை மாறத் தொடங்கியது. இந்த நிலைமை சாதாரணமாகக் கிடைத்தது அல்ல. எத்தனையோ பேர் மதம், கலாச்சாரம் என்ற பெயரில் போட்ட முட்டுக்கட்டைகளைக் கடந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த அரங்கில் நாம் இன்று காணும் இந்தக் காட்சி நூற்றாண்டு கால போராட்டத்தின் விளைவுதான். அறிவியல் பூர்வமாகக் கேள்வி கேட்கும் பழக்கத்தை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

Advertisment

college
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe