Skip to main content

மூக்குத்தி தர்றோம்.. மோசடிகள் பலவிதம் அதில் இது ஒருவிதம் 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Scam at thiruvannamalai

 

திருவண்ணாமலை நகரம், வேங்கிக்கால் பகுதியில் ஸ்டார் பவுன்டேஷன் – ஸ்டார் சேவா மையம் செயல்படுகிறது. இந்த மையம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் என்.ஜி.ஓ அமைப்பினரை ஸ்டார் பவுன்டேஷன் மற்றும் ஸ்டார் சேவா மையத்தோடு இணைந்து செயல்படவைத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

 

அவர்களின் வேலை பவுன்டேஷன் சார்பில் இலவச தையல் மிஷின் வழக்குதல், தாலிக்கு தங்கம், இலவச கனிணி பயிற்சி, ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, காது கேளாதவர்களுக்கு இலவச காது கேட்கும் கருவி வழங்குதல், வேளாண்மை அபிவிருத்தி திட்டம், இலவச கறவைமாடு, ஆடு, நாட்டுகோழி வழங்குதல், தவணை கடன் வழங்குவது உள்ளிட்டவற்றை செய்துவருகின்றனர்.  

 

பொதுமக்களை ஸ்டார் பவுன்டேஷனில் உறுப்பினராக முதலில் இணைக்க வேண்டும். அதற்கு ஒருநபரிடம் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஸ்டார் பவுன்டேஷன் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் எந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறார்களோ அதில் இணைய வேண்டும். அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

 

ரூ. 1 லட்சம் கடன் வேண்டும் என்றால் 10 ஆயிரம் முதலில் டெப்பாசிட் செய்ய வேண்டும். ஆடு வேண்டும் என்றால் 1500 ரூபாய் கட்டினால் இலவசமாக 4 ஆட்டுக்குட்டி தருவார்கள். 1000 ரூபாய் தந்தால் புடவையும், மூக்குத்தியும் தருவார்கள் எனச் சொல்லியுள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக் கணக்கான பெண்கள் பணம் கட்டி சேர்ந்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஸ்டார் பவுன்டேஷனின் நிறுவன இயக்குநர்களான இளவரசி, அவரது கணவர் ஜெயராமன் இருவரும் சென்று 50 பேர், 60 பேருக்கு புடவை, மூக்குத்தி தருவது, ஆட்டுக்குட்டி தருவது எனச்செய்துள்ளனர்.

 

கடந்த ஜனவரி மாதம் ஒவ்வொரு மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லட்சம், லட்சமாக பணம் கொண்டு வந்து தந்துள்ளார்கள். மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று பிரமாண்டமாக விழா நடத்தி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனச் சொல்லியுள்ளார்கள்.

 

அந்த நாளில் விழா நடைபெறவில்லை. பணம் கட்டிய பெண்கள் ஸ்டார் பவுன்டேஷனின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நெருக்கடி தந்துள்ளனர். அவர்கள் திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘மேடத்துக்கு உடம்பு சரியில்லை’ எனச்சொல்லியுள்ளார்கள். அதன்பின் கால் செய்தால் மொபைல் ஃபோன் எடுப்பதில்லையாம். அந்தந்த மாவட்டங்களில் இருந்து நேரடியாக தலைமை அலுவலகமான திருவண்ணாமலை அலுவலகத்துக்கு வந்தபோது அது பூட்டியிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பல கோடி ஏமாந்துவிட்டோம் என புகார் தந்துள்ளார்கள்.

 

என்.ஜி.ஓ அமைப்பினர் மக்களை, அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், அந்த என்.ஜி.ஓக்களையே ஏமாற்றியுள்ளார் திருவண்ணாமலையில் என்.ஜி.ஓ நடத்தும் ஒருபெண்மணி. இந்த மோசடி தமிழ்நாடு முழுவதும் பெண்களை குறிவைத்து நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான கணவன் – மனைவி இருவரும் சிக்கி முழுமையான விசாரணைக்கு பிறகே மோசடி தொகை எவ்வளவு என்பது தெரியவரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலச ஊர்வலம்; அனுமதி தந்த அதிகாரிகள் - கொண்டாடிய பாமக

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுற்றியுள்ள கிராமங்கள் வன்னியர் சமுதாயத்தினர் பலமாக உள்ள பகுதி. வன்னியர் சங்கத்தின் எழுச்சி பெரியதாக இருந்த காலகட்டத்தில் நாயுடுமங்கலம் கூட்டுசாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் 1989ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர் சங்கத்தின் அடையாளம் எனச் சொல்லப்படும் அக்னி கலசம் அமைக்கப்பட்டது. பட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த மருத்துவர் ராமதாஸ், அந்த அக்னி கலசம் சிலையை திறந்து வைத்தார்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்த அந்த அக்னி கலசம் சிலையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலை டூ வேலூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. அப்போது, இதற்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் நாயுடுமங்கலத்தில் திரண்டு மறியல் போராட்டம் செய்தனர். சாலை விரிவாக்கம் முடிந்ததும் மீண்டும் அச்சிலை அங்கு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்பு அங்கு அக்னி கலச சிலை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அக்னி கலசம் சிலை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டது என்றும் அதனால் மீண்டும் வைக்கமுடியாது என அதிகாரிகள் சொன்னதாக கூறியுள்ளனர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

தமிழ்நாடு முழுவதுமே அனுமதி பெறாமல் பல சிலைகள் உள்ளது. அதனை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாயுடுமங்கலம் என்கிற கிராமத்தில் வன்னியர் சமுதாய கலசம் வைப்பது சாதி பிரச்சனையை உருவாக்கும்  என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர் . ஊர் பெயர்தான் நாயுடுமங்கலமே தவிர, அங்கு நாயுடு சமுதாயத்தினர் அவ்வளவாக இல்லை. அப்படியிருக்க இத்தனை ஆண்டுகளாக வராத சாதி பிரச்சனை இப்போது எப்படி வரும்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்தவாரம் திடீரென திருவண்ணாமலை பாமக மா.செ பக்தவாச்சலம் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், அக்னி கலச சிலையை கொண்டுவந்து விடியற்காலை நேரத்தில் அதே இடத்தில் வைத்தனர். இதனை அறிந்த போலீஸார் அச்சிலையை எடுத்துச்சென்று கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதுக்குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சாலை பணி முடிந்ததும் கலசத்தை வைக்கிறேன் என வாக்குறுதி தந்த அதிகாரிகள், இதுவரை வைக்கவில்லை. இதன்பின்னால் ஆளும்கட்சியின் திட்டமிட்ட அரசியல் உள்ளது. திமுக வன்னியர்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. கலசத்தை வைக்க அனுமதிக்கவில்லையென்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டார். அதேபோல் இயக்குநர் கவுதமன் உட்பட வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி நாயுடுமங்கலத்தில் கூடுவோம். கலசத்தை மீண்டும் வைப்போம், திரண்டுவாருங்கள் வன்னிய சொந்தங்களே என பாமக, வன்னியர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.

Officials who gave permission to bury the ashes of Vanniyar Sangam

திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர். இருசக்கர வாகனங்கள், கார்களில் வன்னிய சங்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நாயுடுமங்கலத்திற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.இளங்கோவன் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ மா.செ கணேஷ்குமார் புறப்பட்டனர். வாகனத்தில் புதியதாக அக்னி கலசம் கொண்டுவந்தனர். தடையை மீறி கலசம் வைப்போம் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை திடீரென கலசம் வைக்க அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கொண்டுவந்த அக்னி கலசத்தை பேருந்து நிழற்கூடம் அருகே பீடம் கட்டி அதில் வைத்து வன்னியர் சங்கத்தினரும், பாமகவினரும் வெற்றி கூச்சலிட்டனர். எந்த அசம்பாவிதத்திலும் தொண்டர்கள் ஈடுப்படக்கூடாது என எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தனர். சிலை அமைக்கப்பட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என நான்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 1200 போலீஸார் வழி நெடுக பாதுகாப்புக்கு நின்றனர். போக்குவரத்தில் மிக முக்கிய சாலையான திருவண்ணாமலை - வேலூர் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; அலறும் அரசுத்துறை அலுவலர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாறு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (70). நெசவுத்தொழில் செய்து வந்த வெங்கடேசன், வயது மூப்பின் காரணமாகத் தறி ஓட்ட இயலாததால், மொத்த விலையில் ஊதுபத்தி வாங்கி சில்லறை வியாபாரமாக கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருவத்திபுரம் ஊரைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக ரோட்டரி வழக்கறிஞர் மூலம் இடம் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த இடத்தை ஒட்டி செய்யாறு வட்டாட்சியர் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா ஒன்றும் பெற்றிருந்தார். இவை இரண்டும் முன்னும் பின்னும் இணைந்த ஒரே காலி மனையாக இருந்தது. அதில் கூரை வீடு கட்டி வசித்து வந்துள்ளார் வெங்கடேசன்.

தற்போது 70 வயது ஆன காரணத்தினால் வெங்கடேசன் அந்த இடத்தை  தன்னுடைய மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க நினைத்து செய்யாறு சார் பதிவாளர் அலுவலகம் சென்று சிலரிடம்  விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், 1999 ஆம் ஆண்டு மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக பெற்ற பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதன் பிறகு, மகன் பெயருக்கு நேரடியாக கிரையம் செய்தால் மட்டுமே சொத்தை மாற்ற முடியும் என்று சொல்லியுள்ளனர்.

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

அதனால், பட்டா மாற்றம் விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மக்களுடன் முதல்வர் முகாமில் வெங்கடேசன் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசன் நேற்று (11-03-24) திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள சர்வேயர் பிரிவில் சர்வேயர் கன்னிவேலை சந்தித்து பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது கன்னிவேல், லஞ்சமாக 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்’ என்பதை கூறியுள்ளார். அதற்கு கன்னிவேல், ‘கடைசியா சொல்றேன், 20 ஆயிரம் கொடுத்தால் தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும்’ என்று சொல்லி வெங்கடேசனை அனுப்பிவிட்டார். 

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

இதில் மனமுடைந்து போன வெங்கடேசன், திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனை அணுகி இன்று (12-03-24) காலை புகார் மனு கொடுத்தார், இதன் அடிப்படையில் டி.எஸ்.பி வேல்முருகன் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் தந்து அனுப்பியுள்ளார். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடேசன், சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தபோது, அவர் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்ல இவரும் தந்துள்ளார். அவர் பணம் பெற்றதும் உள்ளே நுழைந்த விஜிலன்ஸ் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.