Advertisment

பட்டியலின புகாரென்றால் ஸ்லோ! பா.ஜ.க. புகாரென்றால் ஸ்பீட்!- எஸ்.சி. கமிஷனை கலைக்கக்கோரி மனு!

பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், பாஜக நிர்வாகி அளித்த புகாரில் விரைந்து செயல்படும் தேசிய பட்டியலின ஆணையத்தை (எஸ்.சி.கமிஷனை) கலைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

 SC Petition to dissolve commission chennai high court

மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கத்தின் தலைவர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், ‘பட்டியலின மக்கள் மீதான பரமக்குடி துப்பாக்கிச் சூடு, மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து 17 பட்டியலின மக்கள் பலியானது என இவ்விரண்டு சம்பவங்களிலும் நடவடிக்கை எடுப்பதில் தேசிய பட்டியலின ஆணையம் விரைந்து செயல்படவில்லை எனவும், தேசிய பட்டியலின ஆணையம் அமைக்கப்பட்டதற்கு மாறாக, அரசியல் ஆதாயம் அடையும் வகையில், முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தில் பாஜக நிர்வாகி அளித்த புகார் மீது மட்டும் விரைந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

chennai high court dissolve sc commission
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe