Advertisment

காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு அறிவிப்பு!!

SBP's body will be cremated with police respect - Tamil Nadu government announcement !!

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பிஉடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில்,அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்துதிருவள்ளூரில் உள்ளபண்ணை வீட்டிற்குகொண்டு செல்லப்படுகிறது.

Advertisment

பண்ணை வீட்டில் நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கரோனா காரணமாக, பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும் 2 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே வாகன தணிக்கை செய்யப்படும் எனவும் எஸ்.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசின் சார்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்எஸ்.பி.பி. எனவே அவரின்புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNGovernment edappadi pazhaniswamy spb
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe