s

வங்கிக்கணக்கில் இருந்து பணம் களவு போவதை தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது எஸ்.பி.ஐ. இந்த புதிய முறை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisment

ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி பணத்தை திருடுவது உபோன்ற நூதன திருட்டுக்களை தடுப்பதற்காக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க, ரகசிய எண்ணை பயன்படுத்தும் முறையினை ஜனவரி 1 ம் தேதி முதல் அறிமுகம் செய்கிறது எஸ்பிஐ.

Advertisment

இந்த புதிய முறையில் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு OTP அனுப்பப்படும். எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை இருக்கும். இந்த முறை எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும். வேறு வங்கி ஏடிஎம்களில் இத்திட்டம் பொருந்தாது. 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்போருக்குத்தான் இந்த புதிய முறை என்பது குறிப்பிடத்தக்கது.