Published on 03/09/2021 | Edited on 03/09/2021

கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி முன்பு முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களையும் பணத்தையும் பறிமுதல் செய்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் வங்கியின் லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர். லாக்கர் கடைசியாக எப்போது திறக்கப்பட்டது எனவும் வங்கி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.