sayan - Walayar Manoj

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கூடாது மனு அளித்திருந்தனர்.

Advertisment

இன்த மனு இன்று (29.01.2019) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் பாலநந்தகுமார், 'இவர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என்றார். அதற்கு நீதிபதி சயான், மனோஜ் ஆகியோர் தரப்பில் கேட்டபோது, 'எங்களுக்கு காலஅவகாசம் நீட்டி தர வேண்டும்' என கேட்டனர். இதையடுத்து நீதிபதி வடமலை, 'வரும் 2ஆம் தேதிக்கு இந்த வழக்கைதள்ளி வைப்பதாகவும், அதுவரை ஜாமீனில் இருக்கலாம் என்றும், இறுதி வாதத்தை வரும் 2ஆம் தேதி எடுத்து வைக்க வேண்டும்' என்றும் சயான், மனோஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்திலிடம் தெரிவித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் சயான், மனோஜ் ஆகியோர் காரில் சென்றனர்.