மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்களின் ஆடையைக் களைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘மணிப்பூரில் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய கலவரம் மற்றும் பெண்களின் ஆடையைக் களைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளாத பாஜக அரசைக் கண்டிக்கிறோம்’ எனத் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘சேவ் மணிப்பூர்’ என ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பதாகைகளை வைத்திருந்தனர்.