
தன்னுடைய மகள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றவும் 82 வயது பெண்மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி, தனியாக வசித்து வந்துள்ளார். நாகலட்சுமியின் மகளும், அவருடையகணவரும்இவர்களதுவீட்டிலேயே வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மகள் தன்னை துன்புறுத்துவதாகவும், வீட்டில் உள்ள பொருட்களை,பணத்தைச் சாவி போட்டுத்திருடிக்கொள்வதாகவும், கேட்டால் அடித்ததாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இவர் “உயிருக்கு ஆபத்து காப்பாற்றுங்கள்” என ஸ்லேட்டில் எழுதி அணிந்து கொண்டு தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)