student

Advertisment

மத்திய பா.ஜ.க.வின் மோடி அரசு கல்வி கொள்கையில் இரட்டை நிலைபாட்டோடு செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தங்களை மறைமுகமாக புகுத்தும் வேலையில் நாடு முழுக்க ஒரே கல்விக் கொள்கை என்பதில் தீவிரமாக உள்ளது. இதை கண்டிக்கும் வகையிலும் பொது கல்வியை பாதுகாக்க கோரியும் இந்திய மாணவர் சங்கம் (S.F.I.) இன்று தமிழகம் முழுக்க வகுப்பு புறக்கணிப்பு மற்றும் ஆர்பாட்டம் என போராட்டங்களை நடத்தியது. ஈரோடு சி.என்.சி. கல்லூரி முன்பு மாணவர் போராட்டம் நடைபெற்றது. அப்போது கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை தமிழக அரசு உயர்த்த வேண்டும். மத்திய மோடி அரசு கல்வியில் காவியை புகுத்த அனுமதிக்க மாட்டோம் என முழக்கமிட்டனர்.