Advertisment

ராணுவமே வந்தாலும் அஞ்சப்போவதில்லை! - சத்யராஜ் ஆவேசப் பேச்சு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் நாங்கள், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசியுள்ளார்.

Advertisment

Satyaraj

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழ்த் திரையுலகினர் இன்று சென்னையில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, இளையராஜா, வைரமுத்து, விஷால், நாசர், வரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்தப் போராட்டத்தின் போது பேசவந்த நடிகர் சத்யராஜ், ‘தோழர்களின், தம்பிகளின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், யாருமே பேசாதபோது, நான் மட்டும் பேசினால் நன்றாக இருக்காது. நான் என்றுமே தமிழர்கள் மற்றும் தமிழ் உணர்வுகளின் பக்கம்தான் நிற்கிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், சபை நாகரீகம் கருதி, நடிகர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட்டு நான் அமைதியாக இருக்கிறேன்’ என பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் குரல் எழுப்பிய நிலையில், நடிகர் சத்யராஜ், ‘வேண்டும் வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும். மூடுங்கள் மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள். தமிழர் உணர்வுகளை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். எந்தக் கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம். குரல் கொடுங்கள்.. தைரியமுள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்’ என முழக்கம் எழுப்பி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

sterlite protest Cauvery management board Satyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe