ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் அந்த மான்கள், உணவு, குடிநீர் தேடி, வனப்பகுதியை ஒட்டியுள்ள சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம்.

Advertisment

 Sathyamangalam-spotted deer

அவ்வாறு சாலையை கடக்கும் மான்கள், வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் தொடர்ந்து தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்க, வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் மான்கள் சாலையை கடக்கும் பகுதியில் பவானிசாகர்,புஞ்சைபுளியம்பட்டி சாலையில் நால்ரோடு அண்ணாநகர் அருகே மான் உருவத்தில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர் வனத்துறையினர்.

மான்கள் நடமாடும் அந்த பகுதியை வனச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில், இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மான்கள் நடமாட்டமுள்ள பகுதிகளை எளிதாக அறிந்து வாகனத்தை மிதவேகத்தில் இயக்கினால் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க முடியும் என வனத்துறையினர் செய்துள்ளனர்.

Advertisment

இதுவெல்லாம் சரி ஆனால் புள்ளி மான் என்ன கலரில் இருக்கும்? அதன் இயற்கையான நிறம் க்கிரே கலரில் வெள்ளை நிறத்தில் புள்ளி, கோடுகள் இருக்கும். ஆனால் வனத்துறையினர் செய்து வைத்துள்ள பலகையில் புள்ளி மான் காவி நிறத்தில் உள்ளது. இதுபற்றி வனத்துறை அதிகாரி கூறுகையில், "நம்ம தமிழ்நாடு அரசுக்கு பிடித்த கலர் பச்சை அதை அடுத்து காவி கலர் பச்சை கலரில் மான் உருவ போர்டு வைத்தால் காட்டுப் பகுதியில் தெரியாது ஆக அரசுக்கு பிடித்த அடுத்த கலர் காவி அகவே தான் காவி கலரில் மான் உருவ போர்டு வைத்தோம்" என்றனர்.