Sathur Fireworks Factory Blast; Chief Minister Relief Notice

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து சம்பவங்களும் அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையப்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருந்து கலக்கும் போது ஏற்பட்ட இந்த விபத்தில், கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (36) என்பவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த சண்முகராஜ் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.