Advertisment

அவர்கள் ஒன்றாகக் கூடுகிறார்கள்... குதூகலமாகக் குளிக்கிறார்கள்... சத்தியமங்கலத்தில் அற்புதக் காட்சி!

Sathiyamangalam elephant bhavanisagar dam

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் இருந்தாலும், பவானிசாகர் அணைக்கு ஏராளமான யானைகள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

Advertisment

தண்ணீரைத் தேடி வரும் யானைகள், கூட்டம் கூட்டமாக சாலையோரம் நிற்பதும் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்த நிலையில், பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் உள்ள 'ஜீரோ பாயிண்ட்' என்ற இடத்தில் தண்ணீரைத்தேடி சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக அணையின் மேற்பகுதியில் உள்ள சாலையைக் கடந்துசென்றது.

Advertisment

பின்னர் தனது குட்டிகளை அணைத்தவாறு அணைக்குள் இறங்கி தண்ணீர் குடித்து, இளைப்பாறி, அரைமணி நேரத்திற்கும் மேலாகக் குதுகலமாகக் குளித்தன. பின்னர் அணையில் இருந்து வெளியேறி, மீண்டும் காட்டுக்குள் சென்றது. அணையின் மேற்பகுதியில் தினமும் நடமாடும் காட்டு யானைகளால் அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Sathiyamangalam elephant bhavanisagar dam

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, பவானிசாகர் அணைப் பகுதியில் தற்போது கூட்டம் கூட்டமாக யானைகள் வந்து குளித்துவிட்டு, தண்ணீர் அருந்திவிட்டு செல்கிறது. எனவே இந்தப் பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் மாடு மேய்ப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். சிலர் ஆர்வமிகுதியால் யானைகள் அருகே சென்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்கின்றனர். இது ஆபத்தை விளைவித்துவிடும் என்றார்.

அவர்களின் வாழ்விடத்தில் இயற்கையுடன் வாழும் வன விலங்குகள் ஒன்று கூடி, குலாவி, குதூகலித்து, குளித்து ஆனந்த மகிழ்ச்சியுடன் செல்வது அற்புதமான காட்சி தான்.

elephant Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe