சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவி, ஒருதலை காதல் பிரச்சனை காரணமாக சதீஸ் என்ற இளைஞரால் பரங்கிமலை ரயில் நிலைய ரயில்வே டிராக்கில் தள்ளிவிடப்பட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பைஏற்படுத்தியிருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ்நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சதீஸிற்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் தயாளன் என்பவரின்மகன்தான் சதீஸ். இவர்கள்ஆலந்தூர் காவலர்குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் இந்த சம்பவம் காரணமாக அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் தங்களைதாக்க முற்படலாம் எனஅச்சத்தில் இருந்த சதீஷின் குடும்பத்தார் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.