Advertisment

புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்களுக்குத் தொடர்பு

sathayamangalam tiger related issue

Advertisment

சத்தியமங்கலம் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளி மகாராஷ்டிரா போலீசாரால்கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வனத்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய குற்றவாளியை சத்தியமங்கலம் புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில் கைது செய்ய சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டறிந்த நீதிபதிகள்,மகாராஷ்டிரா போலீசாரால்கைது செய்யப்பட்டவரை சத்தியமங்கலம் புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில்கைது செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை நவம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Erode sathyamangalam tiger
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe