SATHANKULAM:Three day CBI investigation results ...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூன்று காவலர்களும்,மூன்று நாட்கள்சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டநிலையில், விசாரணைக் குழுவில் இருந்த சிபிஐ காவலர்களுக்கு கரோனாஉறுதிசெய்யப்பட்டது.இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவதற்கு முன்பே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

ஏற்கனவே சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை தொடர்பான வழக்கில் ஐந்துகாவலர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மூன்று நாள் சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவலர்கள் செல்லத்துரை,சாமதுரை, வெயில் முத்து ஆகிய 3 பேருக்கும் மூன்று நாள் சி.பி.ஐ காவல் விதிக்கப்பட்டு மூன்று நாள் சி.பி.ஐ காவல் வழங்கப்பட்ட நிலையில்,காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோர் நேற்று சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், மூன்று போரையும் சம்பவம் குறித்து தனித்தனியாக நடித்தும் காட்டச்சொல்லி அதனை வீடியோபதிவு செய்தனர்.மூன்று விசாரணை முடிந்தநிலையில், தற்போது மதுரை உயர்நீதி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisment

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர் முருகன் முன் ஜாமீன் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அதேபோல் அதேசாத்தான்குளத்தில் காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்த மகேந்திரன் என்பவரது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில்இது தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி. தொடங்கியது. மகேந்திரன் மரணம் தொடர்பாக அவரது சகோதரியிடம்தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.