SATHANKULAM

Advertisment

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பில் கைது செய்யப்பட்டகாவலர்கள் ஐந்துபேரும் சிபிஐ அதிகாரிகளால் சாத்தான்குளம் அழைத்து செல்லப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏற்கனவே காவலர் முத்துராஜ் சாத்தான்குளம் அழைத்து செல்லப்பட்டு இருந்த நிலையில், மற்ற காவலர்களான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன்,காவலர் முருகன் ஆகியோரும் சாத்தான்குளத்திற்கு விசாரணைக்காகஅழைத்து செல்லப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாளை மாலையுடன் சிபிஐ விசாரணைக்கான மூன்று நாள் காவல்முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் சாட்சியமளித்த பெண் காவலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரிய மனுவைதூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.